பக்கத்தில் பழனிசாமி; உதயநிதி எஸ்கேப்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பிரசாரம் செய்ய, உதயநிதியும் பழனிசாமியும் திட்டமிட்டிருந்தனர். இருவருக்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு, பகல் 12:40 மணிக்கு செல்லும் 'இண்டிகோ' விமானத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. முக்கிய பிரமுகர்கள் என்பதால், எதிரெதிர் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தகவல் தெரியவந்ததும், உதயநிதி உடனடியாக 12:40 மணி விமான பயணத்தை ரத்து செய்தார். ஆனால், பழனிசாமி அதே விமானத்தில் திருச்சி சென்றார். உதயநிதிக்கு அவசர அவசரமாக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, மதியம் 2:45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி சென்றார். உதயநிதி மற்றும் பழனிசாமி இருவரது பயணம், கடந்த வாரத்தில் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதை உளவு துறை அதிகாரிகள் அறிந்தும், முன்கூட்டியே சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடுப்பான உதயநிதி, உளவு துறை அதிகாரிகளை கடிந்துள்ளார். மேலும், 'இனி பிரசாரம் முடியும் வரை, தனி விமானமே எனக்கு ஏற்பாடு செய்யுங்கள்' என, உதவியாளர்களிடம் கறாராக கூறி விட்டதாகவும் தெரிகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am