மன்னராட்சிக்கு மக்கள் முடிவு: ஆதவ் அர்ஜுனா உற்சாகம்
சென்னை: ''தமிழக மக்கள், மன்னராட்சி மனப்பாண்மைக்கு முடிவு கட்டியதுடன், பணம், ஜாதி, மதம் சார்ந்த அரசியலை துாக்கி எறிந்துள்ளனர்,'' என, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சென்னை, வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பின், அவர் அளித்த பேட்டி: கரூரில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த, 41 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் யார் இருந்தனர். எங்கள் கட்சி தலைவருக்கு எதிராக, யார் சதி செய்தனர் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். தி.மு.க.,வின் குடும்ப ஊழல் ஆட்சி, மன்னராட்சி மனப்பாண்மைக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர். எங்கள் கட்சி தலைவர், பெரம்பூரில் தேர் தல் பிரசாரம் செய்துவிட்டு, கொளத்துார் செல்ல இருந்தார். ஆனால், காவல் துறையினர் வாயிலாக, நெருக்கடி கொடுத்து, பிரசாரத்தை ரத்து செய்ய வைத்தனர். எங்கள் தலைவர் பிரசாரம் செய்ய, எவ்வளவு நெருக்கடி கொடுத்தனர் என்பதை மக்கள் அறிவர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. அதனால், அவர் படுதோல்வி அடைந்துள்ளார். தமிழக மக்கள், இந்த தேர்தலில், பணம், ஜாதி, மதம் சார்ந்த அரசியலை துாக்கி எறிந்துள்ளனர். மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவர் என்ற குற்றச்சாட்டை, அடித்து நொறுக்கி உள்ளனர். தமிழக மக்கள், பெண்கள், இளைஞர்கள் என, எல்லோரும் எங்கள் தலைவரை, தம்பியாக, அண்ணனாக, மகனாக ஏற்றுக்கொண்டு ஓட்டளித்துள்ளனர். குடும்ப நாடக ஊழல் ஆட்சியை துாக்கி எறிந்து, புதிய ஆட்சியை மலர வைத்துள்ளனர். தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கு மேல் கோலோட்சிய கட்சிகளை, மண்ணை கவ்வ வைத்து, புதி ய வரலாறு எழுதி உள்ளனர். எங்கள் வெற்றியை, கரூரில் உயிரிழந்த எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், தமிழக மக்கள் எல்லோருக்கும் சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 21 )
திமுகவிற்கு ஒரு கருணாநிதி குடும்பம். அதிமுகவிற்கு ஒரு சசிகலா குடும்பம். தவெகவிற்கு ஒரு ஆதவ் அர்ஜுனா.
இந்துமதத்தைப்போல ஏமாற்றுப்பேர்வழிகள். சினிமா மூலம் இந்துக்களை, தமிழர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டார்கள். தமிழகத்தின் கதி அதோகதிதான் .
தமிழக மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கேரள லாட்டரி வியாபாரிகள் உருவி விடுகிறார்கள்..... தயவு செய்து தமிழகத்தில் லாட்டரி தொழிலை திறந்து விடுங்கள்.... அஷ்ட லட்சுமியின் பூர்ண அருள் கிடைக்கட்டும்.... 100 சதவீதம் அதிஷ்டம்.
ஏ ன்,, இங்கு அதே செயல் செய்யவா
அப்படி என்றால் ஏன் உங்கள் குடும்பத்தில் ஒருவர் தலைமை ஏற்கவில்லை?
பெரும் ஊழல் செய்த லட்சம் கோடிகள் கொள்ளை அடித்த உதயநிதி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டு அவர்களை உள்ளே தள்ளி கொள்ளையடித்த பணங்களை மீட்டு கஜானாவில் செலுத்தவும் ரொம்ப புண்ணியமாக போகும் அதை விட்டுவிட்டு அவர்களுக்கு சாதகமாக நீங்கள் செயல்பட்டால் ஆண்டவன் மன்னிக்க மாட்டார்.
யோவ், நான் நம்பினேன் நீயும், ஜான் ஆரோக்கியசாமியும் , அருண்ராஜ்ம் மாற்றத்தை உருவாக்குவீங்க என்று , நிரூபித்து உள்ளீர்கள் , மத சாயம் இல்லாமல் பாத்துக்கோங்க , எனது தாழ்மையான வேண்டுகோள்
அது எப்படி என்று இனி தெரியும்
உண்மையிலேயே சில அறிவாளிகளை கொண்டுள்ளது தவேக , எப்படி அண்ணாமலை அய்யா இருக்கிறார்களோ அதேபோல இங்கே அருண்ராஜ் , காங்கிரசில் செசிகாந்த் செந்தில் போன்றோரை நான் மாற்றம் உண்டாக்குவோர் பட்டியலில் வைத்துள்ளேன் . ஆனால் திமுகவை விட அதிக மதவாதிகளை கொண்ட கட்சியாக தவேகவை பார்க்கிறேன் , அதுதான் சற்றே பயமா உள்ளது
விஜய்க்கு 35 சதவீதம் தான் ஆதரவு . எதிர்ப்பு 65 சதவீதம். எல்ல்லோரும் அவரை ஏற்கவில்லை. அதை மறக்க வேண்டாம் . உங்கள்குடும்பத்தில் எதுநீ பேர் எம் எல் எ . ? டீ வி கே ஊழல் வசதிகளின் கூட்டம். திமு க விட மோசமான கட்சி டி வி கே
அடுத்த தமிழ்நாட்டு கேஜரிவால் ஆட்சி மாதிரி இருக்குமா
மன்னராட்சியே தேவலை என்ற நிலைக்கு ரௌடிகள் ராஜ்யம் நடத்தி மக்களை துன்புறுத்தாமல் இருந்தால் மகிழ்ச்சி தான்!
மிக முக்கியமான விஷயம்
புதிய சனநாயகம் மற்றும் ஒரே நேரத்தில் பல நம்பர்கள் என்று பெயர்
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am