ப்ளீஸ் ஒரே ஒருமுறை; கெஞ்சும் த.வெ.க.,வினர்
சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் த.வெ.க., 233 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சி வேட்பாளர்களில், பெரும்பாலானோர் புதுமுகம் என்பதால், புதுமையான முறையில் பிரசாரம் செய்கின்றனர். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் செல்வம், பார்த்தசாரதி கோவிலை சுற்றியுள்ள தெருக்களில், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவரும், அவருடன் வந்த கட்சி தொண்டர்களும், வாக்காளர்களை பார்த்து, கை கூப்பி வணக்கம் தெரிவித்து, 'நாங்க புதுமுகம், ப்ளீஸ்... ஒரே ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாங்க' என்று கெஞ்சி ஓட்டு கேட்டனர். அவர்கள், கெஞ்சி கேட்பதை பார்த்து, வாக்காளர்களும் வணக்கம் தெரிவித்தபடி சென்றனர். இதேபோல், பெரும்பாலான தொகுதிகளில் த.வெ.க., வேட்பாளர்கள், 'ஒரே ஒருமுறை வாய்ப்பு தாங்க' என, வாக்காளர்களிடம் கெஞ்சி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது மாதிரித்தான்... சீமான் வந்த நாள் முதல் இன்று வரை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்... கடந்த 10, 15 ஆண்டுகளாக... இப்பத்தான் 8 சதவித வாக்கு வாங்கியிருக்கிறார்.. இவனுங்கள கெஞ்சுனா போட்டுருவாங்களா... திருச்சில பார்த்திங்களா... வாக்கு சேகரிக்கச் சென்ற தவெக..வினரை தடியெடுத்து அடித்து விரட்டுகிறார்... வயதான வாக்காளர் ஒருவர்... இன்னும் இருக்கு இவனுங்களுக்கு... இவனுங்க தமிழ்நாட்டு வாக்காளர்களை கேணயனுங்கன்னு நினைச்சிட்டானுங்க... 6 மணிக்கு மேலே பிரச்சாரம் பண்ணாத தலைவனும்.. இவங்களும், இவங்களுடைய தற்குறித்தலைவனும்.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am