பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
சேலம்: சேலம் மேற்கு தொகுதியில், ராமதாஸ் அணி சார்பாக போட்டியிடும், எம்.எல்.ஏ., அருளை ஆதரித்து, பள்ளப்பட்டியில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசினார். தொடர்ந்து, ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் புறப்பட்டார். அவரை, இரு தொண்டர்கள் கைத்தாங்கலாக அழைத்து சென்றனர். அப்போது, திடீரென ராமதாஸ் தடுமாறி மயக்கம் அடைந்தார். இதனால், நிர்வாகிகள், தொண்டர்கள், பதறி அடித்து அவரை நெருங்கினர். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் ராமதாசை அனுப்பி வைத்தனர். அவர், குரங்குச்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலத்தில் பிரசாரம் செய்தபோது மயக்கமடைந்த பா.ம.க., நிறுவனர் ராமதாசை உடனிருந்தோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am