பா.ம.க., மாம்பழம் சின்னம் வழக்கு; சென்னை கோர்ட்டில் ராமதாஸ் முறையீடு
சென்னை: பா.ம.க.,வின் 'மாம் பழம்' சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. பா.ம.க.,வில், நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடிக்கிறது. கட்சி, சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடைவிதிக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து, ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாம்பழம் சின்னத்தை கேட்டு சிவில் நீதிமன்றத்தை உடனடியாக நாடுமாறு, ராமதாஸ் தரப்புக்கு நேற்று முன்தினம் அறிவுறுத்தியது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவை மூன்று நாட்களில் விசாரித்து முடிவெடுக்க, சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மபிரபு முன், ராமதாஸ் தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am