/ செய்திகள் / கூட்டணியை விட கொள்கையே முக்கியம்: சொல்கிறார் கமல்

கூட்டணியை விட கொள்கையே முக்கியம்: சொல்கிறார் கமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' என்னுடைய கூட்டணி மொத்த இந்தியாவோடு. கூட்டணியை விட கொள்கையே முக்கியம்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் கமலின் கன்னிப்பேச்சு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில், '“எங்கள் ஓட்டுகளை செலுத்த விரும்புகிறோம். எழுத்துப்பிழைகள் மொழிகளுக்கு மட்டுமே சாபம். நவீன இலக்கியமும், இணையமும் கூட உள்ளடக்கத்திற்காக இவற்றை மன்னித்துவிடும். ஆனால், தேர்தல் கமிஷன் மன்னிப்பதில்லை. இ.சி., என்றால் 'இங்கிலீஷ் கோச்' இல்லை,” ' எனத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த கமல் கூறியதாவது: ஜனநாயகத்தில் விவாதம் நடப்பது இயல்பு. நல்ல கருத்து பேசியிருப்பதாக உணர்கிறேன். மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும்.என்னுடைய கூட்டணி ஒட்டு மொத்த இந்தியாவோடு. இந்தியாவின் நலன் தான் எனது நலன். உங்களின் நலன். கூட்டணி என்பது 6 ஆண்டுக்கு ஒரு முறை அமைக்கப்படுவது. கூட்டணியை விட கொள்கையே முக்கியம். எங்களின் தேர்தல் வியூகத்தை உங்களிடம் கூற முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !