ராமதாஸ் - சசிகலா திடீர் சந்திப்பு
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை, சசிகலா நேற்றிரவு சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தி.மு.க., மற்றும் தே.ஜ., கூட்டணிகளில் பலமுறை முயன்றும், அவரது முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக அவரது தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்றிரவு சசிகலா வந்தார். தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராமதாசும் சசிகலாவும் ஆலோசனை நடத்தினர். ஒன்றரை மணி நேரம் பேசிய பின், சசிகலா புறப்பட்டுச் சென்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am