ராமதாஸ் அணி வேட்பாளர் அன்புமணியிடம் தஞ்சம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திண்டிவனம்: விக்கிரவாண்டி தொகுதியில் ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் புகழேந்தி, அன்புமணியிடம் ஐக்கியமானார். அணி மாறிய அவரை கட்சியை விட்டு நீக்குவதாக, ராமதாஸ் அறிவித்துள்ளார். பா.ம.க.,வில் தற்போது ராமதாஸ், அன்புமணி என இரு பிரிவாக பிளவு பட்டுள்ளது. வரும் தேர்தலில் இரு தரப்பினரும் போட்டி போட்டிக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரு தரப்பு வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர். இதில் விக்கிரவாண்டி தொகுதியில், அன்புமணி தரப்பில் மயிலம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ., சிவக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் ராமதாஸ் அணி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், புகழேந்தி சென்னையில் அன்புமணியை சந்தித்து, அவரது அணியில் ஐக்கியமாகி விட்டார். இதனால் டென்ஷனான ராமதாஸ், தனது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பாஜக ஹேப்பி அண்ணாச்சி.
Dr.Ramdass is senile now due to his advanced age , at this age , he will become more adamant and will not change his mind .
பார்த்து அன்புமணி.
சங்கரா சங்கரா
அங்கேன்னா செலவை சொந்தப்பணத்தில் செய்யணும். இங்க பி எம் கேர்ஸ் கேஷ் கிடைக்கும்.
ராமதாஸ் தேர்தலுக்கு பிறகு இந்த முடிவை எடுப்பார்
ஓவர்
அரசியலில் அப்பாவும் மகனும் சண்டை போடலாமா? ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். கட்சியில் அப்பாவும் மகனும் சண்டை போட்டால் மாம்பழத்தை எப்போது ஜூஸ் போட்டு குடிக்கலாம் என்று காத்திருக்கும் எதிர் கட்சிகளுக்கு கொண்டாட்டம். கலைஞர் தன் மகன் ஸ்டாலினை துணை முதல்வராக்கி அழகு பார்த்தார் ஸ்டாலின் தன மகன் உதயநிதியை துணை முதல்வராக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்பா மகன் உறவு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
எதிரிகள் ஜுஸ் போடும் முன்னே அவர்களே பழத்தினை பஞ்ஜாமிர்தம் ஆக்கிவிடுவார்கள்
what about Azhagiri and Karunanidhi?
அரசியல் ஓய்வு எடுக்க வேண்டிய நாளில் நானும் அரசியல் ஆடுவேன் என்றால் சொந்த கட்சிக்காரன் ஓட தான் செய்வான்
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am