/ செய்திகள் / தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!

தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை இன்று (மார்ச் 15) இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. டில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்வர் குமார் உள்ளிட்ட தேர்தல் கமிஷனர்கள் தேர்தல் அட்டவணையை வெளியிட்டனர். தமிழக சட்டசபை தேர்தல் (ஏப்.,23 ) * வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 30.03.2026* வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்- 06.04.2026* வேட்பு மனு பரிசீலனை -07.04.2026* வேட்பு மனு வாபஸ் -9.04.2026* ஓட்டுப்பதிவு- 23.04.2026* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026அதேபோல், கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் சட்டசபை தேர்தல் (ஏப்.,09 ) * வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 16.03.2026* வேட்பு மனு கடைசி நாள்- 23.03.2026* வேட்பு மனு பரிசீலனை-24.03.2026* வேட்பு மனு வாபஸ் -26.03.2026* ஓட்டுப்பதிவு- 9.04.2026* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் (ஏப்.,09 ) * வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 16.03.2026* வேட்பு மனு கடைசி நாள்- 23.03.2026* வேட்பு மனு பரிசீலனை-24.03.2026* வேட்பு மனு வாபஸ் -26.03.2026* ஓட்டுப்பதிவு- 09.04.2026* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026மேற்குவங்கம் சட்டசபை தேர்தல் (இரண்டு கட்டம்) முதல் கட்டம் * வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 30.03.2026* வேட்பு மனு பரிசீலனை- 06.04.2026* வேட்பு மனு கடைசி நாள்-07.04.2026* வேட்பு மனு வாபஸ் -09.04.2026* ஓட்டுப்பதிவு- 23.04.2026* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026 இரண்டாம் கட்டம் * வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 02.04.2026* வேட்பு மனு பரிசீலனை- 09.04.2026* வேட்பு மனு கடைசி நாள்-10.04.2026* வேட்பு மனு வாபஸ் -13.04.2026* ஓட்டுப்பதிவு- 29.04.2026* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026

ஜனநாயக திருவிழா

டில்லியில் நிருபர்களிடம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறியதாவது: தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்தது. தகுதியான ஒரு வாக்காளர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடந்தன. இது எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு நடக்கும் தேர்தல். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5.67 வாக்காளர்கள் உள்ளனர். 5 மாநிலங்களில் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ளன. சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். தமிழகத்தில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். பாதுகாப்பு பணியில் 8.5 லட்சம் பேர் ஈடுபடுவார்கள். அசாம், கேரளா, மேற்குவங்கம், தமிழகம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக உரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். பூத் அலுவலகர்கள் முதல் அனைத்து தேர்தல் அலுவலர்களும் சுமுகமான தேர்தலுக்கு பொறுப்பாவார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் . நேர்மையான, அமைதியான தேர்தல் நடத்த கமிஷன் முடிவு செய்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 17.04 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இது ஜனநாயக திருவிழா ஆகும். இவ்வாறு ஞானேஷ்குமார் கூறினார். தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!டில்லியில் தேர்தல் கமிஷனர்கள் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தனர். இவர்களது நிருபர்கள் சந்திப்பு, தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.https://www.youtube.com/live/-SxlxipdTGU?si=IHqQk_eUVDIOuVHI

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !