ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு
சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துாரில் தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி ஆகியோர் போட்டியிட, தி.மு.க.,வினர் விருப்ப மனு அளித்தனர்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறும் பணி, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றனர். பொதுத் தொகுதிகளில் போட்டி யிட, விண்ணப்பக் கட்டணமாக 25,000 ரூபாய்; தனித் தொகுதிகளில் போட்டியிட 15,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am