மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார் என புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுந்தர். சியின் மனைவி குஷ்பு, பாஜவில் உள்ளார்.
மதுரை மத்திய தொகுதி தற்போது திமுகவின் வசமுள்ளது. கடந்த 2021 தேர்தலில் இங்குப் போட்டியிட்ட அமைச்சர் தியாகராஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am