தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, டில்லி கூட்டத்தில் வலியுறுத்துமாறு, தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது. மாநில வாரியாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில், தமிழக காங்கிரசை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அவர்களை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரும், அமைப்பு செயலருமான ராம்மோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am