தமிழக சட்டசபை தேர்தல்: பா.ஜ., வார் ரூம் தயார்!
புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகள் ஏறக்குறைய முடிவாகிவிட்டன. தி.மு.க., ஒரு பக்கம், அரசு பணத்தை மக்களுக்கு இலவசம் என அறிவித்து, கட்சி பணத்தை காப்பாற்றி வரும் நிலையில், அ.தி.மு.க.,வோ ஏகத்துக்கும் இலவசங்களை அறிவித்துள்ளன.இந்நிலையில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம், தமிழக தேர்தலைக் கண்காணிக்க, டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் ஒரு அறை தயார் செய்யப்பட்டு உள்ளது. இதை, 'தமிழக வார் ரூம்' என்கின்றனர். இதில், தமிழகத்தின் வரைபடம் சுவரில் பெரிதாக மாட்டப்பட்டு உள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am