தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு உள்ளது. அக்கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேட்பாளர் தேர்வில் அக்கட்சியில் எழுந்தகுளறுபடி காரணமாக பட்டியல் வெளியிடுவது தாமதமானது. நேற்று ராகுல், கார்கே உள்ளிட்டோர் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.இந்நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை,காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டு உள்ளார்.இதன்படி01. பொன்னேரி - துரை சந்திரசேகர்02. வேளச்சேரி- அசன் மவுலானா03. ஸ்ரீபெரும்புதூர்- செல்வப்பெருந்தகை04. சோளிங்கர்- முனிரத்னம்05. ஊத்தங்கரை- குப்புசாமி06. கிருஷ்ணகிரி - செல்லகுமார்07. பெண்ணாகரம்- தமிழ் குமரன்08. ஈரோடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்09. ஆத்தூர் - அர்த்தநாரி10. ஊட்டி - ராமச்சந்திரன்11. கவுண்டம்பாளையம் - சூரிய பிரகாஷ்12. சிங்காநல்லூர் - ஸ்ரீநிதி நாயுடு13. துறையூர்- விச்சு லெனின் பிரசாத்14. கடலூர் - சந்திரசேகரன்15. மயிலாடுதுறை - ஜமால் யூனுஸ் முகமது16. அறந்தாங்கி - ராமசந்திரன்17. காரைக்குடி - மாங்குடி18. உசிலம்பட்டி - சரவணகுமார்19. சிவகாசி - கணேசன் அசோகன்20. திருவாடனை - ராம கருமாணிக்கம்.21.ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ்22. சங்கரன்கோவில் - சங்கை கணேசன்23. அம்பாசமுத்திரம் - வி.பி.துரை24. நாங்குநேரி - ரூபி மனோகரன்25. குளச்சல் - தாரகை கத்பர்ட்26. விளவங்கோடு - பிரவீன்27. கிள்ளியூர் - ராஜேஷ் குமார்* மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.* 12 எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.* சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாமக கவுரவ தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரனுக்கு பென்னாகரம் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
5 பேருக்கு வாய்ப்பு மறுப்பு
காங்கிரசில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏக்களான பிரின்ஸ்(குளச்சல்), கணேஷ்(ஊட்டி), ராஜ்குமார்( மயிலாடுதுறை) பழனி நாடார்( தென்காசி), ராதாகிருஷ்ணன்( விருத்தாசலம்) ஆகியோருக்கு இப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.* விஜயதாரணி ராஜினாமா செய்ததால் காலியான விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற தாரகை கித்போர்டு, இப்போது குளச்சல் தொகுதியில் போட்டியிடுகிறார். விளவங்கோடு தொகுதியில் பிரவீன் என்பவர் களமிறக்கப்பட்டு உள்ளார்.2 பெண்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am