விஜயகாந்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது; பாஜ விமர்சனம்
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை விஜயகாந்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழக பாஜ விமர்சித்துள்ளது.சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிகவைத் தவிர ஏனைய கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை எப்போதே வெளிப்படுத்தி விட்டன. கூட்டணி பேரத்தால் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணியில் இணைந்து கொண்டார். இதன்மூலம், தேமுதிக முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.இது தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்து விட்டது. தேமுதிகவின் இந்த நகர்வு அதிமுக மற்றும் பாஜவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am