/ செய்திகள் / தேஜ கூட்டணி மாற்றத்துக்கானது: பிரதமர் மோடி

தேஜ கூட்டணி மாற்றத்துக்கானது: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' தேஜ கூட்டணியை மாற்றத்துக்கானதாக மக்கள் பார்க்கின்றனர்,'' என பிரதமர் மோடி கூறினார்.தமிழகத்தை சேர்ந்த பாஜ பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தேர்தலுக்கு தயாராவது மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணி குறித்து பிரதமர் விளக்கினார்.அப்போது மோடி கூறியதாவது: தேஜ கூட்டணியை மாற்றத்துக்கானதாக மக்கள் பார்க்கின்றனர். ஒரு காலத்தில் திமுக மத்தியில் அங்கம் வகித்த போது தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் வரவில்லை. மத்தியில் பாஜ அரசு அமைந்த பிறகே ரயில்வே, சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகள் விரைந்து செயல்படுத்தி வருகிறது.பாஜ அரசு அமைந்த பிறகு தான் தான் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டன. ராமேஸ்வரம் பாம்பன் பாலம் முன்பு எப்படி இருந்தது என்பதையும், பாஜ ஆட்சியில் எப்படி மாறியது என்பதையும் உணர்வீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கவலை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருடன் கலந்துரையாடும் போது மோடி கூறுகையில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் பயன்பாடு குறித்த கவலைகள் உள்ளன. தமிழகத்தில் சட்ட விரோத விஷயங்களுக்கு திமுக அரசு பாதுகாப்பாக இருப்பது கவலைக்குரிய விஷயம். பாஜவினர் சிறிய சிறிய கூட்டங்களை நடத்த வேண்டும். முதல்முறை வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என்றார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !