கரூர் சம்பவத்துக்கு காரணம் மிகப்பெரிய சூழ்ச்சியே
தி.மு.க.,வின் அரசியல் என்பது, 'கட்டிங் -செட்டிங்' தான். த.வெ.க., தலைவர் விஜய், தன் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தபோதே தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு விட்டது. கரூர் சம்பவத்துக்கு மிகப்பெரிய சூழ்ச்சி தான் காரணம்.தி.மு.க., கூட்டணியில், காங்., உட்பட அனைத்து கட்சிகளுக்குமே உரிய மரியாதை கிடைப்பதில்லை. தங்கள் குடும்பம் மட்டுமே அதிகாரத்துக்கு வர வேண்டும் என தி.மு.க., நினைக்கிறது. ஆனால், ஆட்சி நிர்வாகம் பூஜ்ஜியமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது த.வெ.க.,வின் கொள்கை முழக்கம். தமிழகத்தில், பெண்கள் மத்தியில் த.வெ.க.,வுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வை பெண்கள் நிச்சயமாக ஆதரிப்பர். தமிழக மக்களின் வாழ்க்கையை மாற்றத்தான், அரசியலுக்கு விஜய் வந்திருக்கிறார். - ஆதவ் அர்ஜுனா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர், த.வெ.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am