திமுகவிடம் காங்கிரஸ் கொடுத்த விருப்ப தொகுதி பட்டியல் இவை தான்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 39 தொகுதிகள் கொண்ட விருப்ப தொகுதி பட்டியலை காங்கிரஸ் அளித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் வழங்கப்பட்டது. காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தி.மு.க., கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில், எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது குறித்தும், யாருக்கெல்லாம் 'சீட்' வழங்குவது என்பது குறித்தும் ஆலோசிக்க, தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. பிறகு 39 தொகுதிகள் கொண்ட விருப்ப தொகுதி பட்டியலை திமுக தலைமையிடம் காங்கிரஸ் அளித்துள்ளது. காங்கிரசின் விருப்ப தொகுதி பட்டியல் பின்வருமாறு:1. கிள்ளியூர்,2. குளச்சல்,3.விளவங்கோடு,4.பத்மநாதபுரம்,5.திருவைகுண்டம்,6. விருதுநகர்7. ஆலங்குளம்8. தென்காசி9.காரைக்குடி10.திருவாடானை11.ராமநாதபுரம்12.முதுகளத்தூர்13.நாங்குநேரி14. திருநெல்வேலி15. ஊத்தங்கரை16. மணப்பாறை17.முசிறி18. சோளிங்கர்19.அம்பத்தூர்20. ஸ்ரீபெரும்புதூர்21. பொன்னேரி22. மயிலாடுதுறை23. கடலூர்24. கும்பகோணம்25.சிதம்பரம்26. வேடசந்தூர்27. மொடக்குறிச்சி 28. மதுரை மத்தி29. திருப்பூர் மேற்கு30.கோவை தெற்கு31. மதுராந்தகம்32.கலசப்பாக்கம்33.அரந்தாங்கி34.புதுக்கோட்டை35. மேட்டூர்36. வேளச்சேரி37. ஊட்டி38. சிவகாசி39. விருத்தாச்சலம்காங்கிரசுக்கு, தற்போது 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களுக்கான தொகுதிகளில், ஐந்து முதல் ஏழு வரை மாற்றப்பட உள்ளன. காங்., எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகள் சிலவற்றை, தி.மு.க.,விடம் கூட்டணி கட்சிகள் கேட்டு வருகின்றன. அதனால், அவற்றை காங்கிரஸ் தக்க வைக்குமா அல்லது தாரைவார்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அதேநேரத்தில் இந்த பட்டியல் தமிழக காங்கிரசின் அதிகாரப்பூர்வ பட்டியல் இல்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am