/ செய்திகள் / விஜயின் பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் மிஸ்சான விவரங்கள்; 3வது முறையாக திருத்தி புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல்

விஜயின் பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் மிஸ்சான விவரங்கள்; 3வது முறையாக திருத்தி புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெரம்பூர் தொகுதியில் புதிய பிரமாண பத்திரத்தை தவெக தலைவரும், நடிகருமான விஜய் தாக்கல் செய்துள்ளார். மொத்தமாக 3வது முறையாக அவரது வேட்பு மனுவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தவெக தலைவரான நடிகர் விஜய் தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுக்களையும் அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டார். அவர் தாக்கல் செய்த இரு வேட்பு மனுக்களிலும் வெவ்வேறு தகவல்கள் இடம்பெற்று இருந்தது. பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தம் மீது எந்த குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதே சமயத்தில் திருச்சி கிழக்கில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி இருந்தார். மேலும் இரு தொகுதிகளிலும் விஜய் வயதும் முரணாக குறிப்பிடப்பட்டு இருந்ததால் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, தவெக வக்கீல்கள் தரப்பில் பெரம்பூர் தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய கடந்த 30ம் தேதி உரிய மனுக்கள் அளிக்கப்பட்டன. பின்னர், சில தகவல்கள் விடுபடவே மீண்டும் திருத்தம் செய்யப்பட்ட மனுவை ஏப்.4ம் தேதி பெரம்பூர் தவெக மாவட்ட செயலாளர் சிவா, தேர்தல் நடத்தும் அதிகாரி கீதாவிடம் வழங்கினார். விஜய் மீதான வழக்கு விவரங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அதாவது மதுரை மாநாட்டில் ரசிகர்களை தூக்கி வீசியதாக தொடரப்பட்ட வழக்கு விவரங்கள், கொளத்தூரில் பிரசாரத்தின் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கின் விவரங்கள் அதில் சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த பிரமாண பத்திரத்தில் விஜயின் பிரசார வாகனம் (இதன் மதிப்பு ரூ.6 கோடி), வயது குறித்த தகவல்களும் இணைக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்ற நிலையில், கடந்த முறை விடுபட்டு இருந்த தகவல்கள் அனைத்தும் உள்ளடக்கிய புதிய பிரமாண பத்திரத்தை விஜய் தாக்கல் செய்துள்ளார். இதை விஜய் நேரில் சென்று தாக்கல் செய்யவில்லை. மாறாக, பெரம்பூர் தவெக மாவட்ட செயலாளர் சிவா, தேர்தல் நடத்தும் அதிகாரி கீதாவிடம் வழங்கி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Seekayyes
ஏப் 07, 2026 04:28

வழக்கறிஞர்கள், சீ.ஏ. தனிப்பட்ட முறையில் விஜய்க்கு இல்லையா?


S. Venugopal
ஏப் 06, 2026 22:48

சினிமாவில் ஒரு சீனை பல டேக்குகள் எடுத்து எடிட் செய்து உருவாக்குகிறார்களோ அதேபோல வேட்ப்புமனு தாக்கல். ஒதுக்கப்பட்ட சின்னமும் சினிமாத்துறையும் பிரிக்கமுடியாதது.


Bharath Sundar
ஏப் 06, 2026 21:46

ஒரு வேட்பு மனுப்படிவத்தையே சரியாக தயாரிக்க இயலவில்லை என்றால் நாளை ஆட்சிக்கு வந்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கவோ , புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடவோ இவர்களால் இயலுமா? வழக்கறிஞர்கள் இருந்தும் இவ்வளவு ஒட்டை என்றால்?....


தமிழ்வேள்
ஏப் 06, 2026 21:32

ஹெ..ஹெ..ஹெ..


பா மாதவன்
ஏப் 06, 2026 21:23

பெயர், வயது, சொத்து, வழக்கு இது பற்றி சொல்வதெல்லாம் பொய் என்று நல்லாவே தெரிகிறது. பொய்யே சொன்னாலும் உண்மை மாதிரி சொல்ல தெரியல . நடிகன் என்பதால், எல்லாம் நடிப்பாகவே இருக்க கூடாது. திமுக பி டீம் ஆக இருந்தா மட்டும் போதாது அவங்க கிட்ட ஓர் பொய்யை எப்படி உண்மை மாதிரியே பேசறதுன்னு நல்லா கத்துக்கணும். அப்ப தான் தமிழக மக்கள் தலையில் நல்லா மிளகாய் அரைக்க முடியும்.


Marai Nayagan
ஏப் 06, 2026 20:16

திருட்டு திமுக பி டீம் ஜேக்கப் விஜய்...மிச நரி- சபரிசன் - உதயநிதி கூட்டு தயாரிப்பு த.வெ.க 1000 கோடி பட்ஜெட் ... திமுக வை திட்டுவது போல நடித்து திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து திமுக ஆட்சிக்கு வர நாடகம்...கமல ஹாசன் வழியில் ...புரிந்தவர் பிஸ்தா


Barakat Ali
ஏப் 06, 2026 19:59

டற்க்குறியா இருக்கலாம் ....


Palanivelu Kandasamy
ஏப் 06, 2026 19:39

முன்பு ஒருத்தர் மனைவி இல்லை என்று பிரமாணம் கொடுத்தார். அதை நிராகரிக்கவில்லையே. அடுத்த தேர்தலில் அந்த மனைவி வந்துவிட்டார் இங்கேயும் விவாகரத்து வழக்கு கணக்கில் வராது - கிரிமினல் இல்லை என்பதால்? ஆனால் இது நடத்தை சம்பந்தப்பட்டது இல்லையா?


கேடி ராகவன் ஐயங்கார்
ஏப் 06, 2026 19:03

இந்த ப்ராமணபத்திரத்தின் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் உண்மை தன்மை குறித்து கேள்வி கேட்டு அல்லது மாறுபட்ட ஆதாரங்களை சமர்ப்பித்து பல பொது நலவழக்குகளை நாம் எதிர்பார்க்கலாம். எதற்கு இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நாட்டை ஆள ஆசைப்படவேண்டும் ?? இது போன்ற ஆளை வலுக்கட்டாயமாக அரசியலில் இழுத்துவிட்டுள்ள ஆட்களின் திட்டம் தமிழகத்தை நாசப்படுத்த வேண்டும். வடமாநிலங்களை விட அதிவேகத்தில் முன்னேறுவதை பார்த்து வயிற்றிச்சல் பட்டு ஆளும் கட்சியை பலவீனப்படுத்தவும் எதிர்க்கட்சியை சிதறடிக்கவும் திட்டம் போட்டு ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க பார்க்கும் அப்பட்டமான கயமைத்தனம் கண்ணுக்கு நேரே தெரிகிறது. தமிழர்கள் புத்திசாலிகள். இதை உணர்ந்து செயலாற்றுவார்கள்.


ஆகுயர்த்தோன்
ஏப் 06, 2026 18:55

ஜோசப் இந்த தேர்தல் சோசியல் மீடியாவில் இல்லை , மக்கள் வோட்டு போட்டு வெற்றி பெற வைக்கணும்