எங்களின் வலிமைக்கேற்ப தொகுதிகள் வேண்டும்; கேட்கிறார் திருமாவளவன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'நாங்கள் பேரம் பேசும் கட்சி இல்லை. அதிகாரப்பகிர்வு என்பது எங்களின் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும்,' என்று திமுகவுடன் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; விசிக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். 2026 சட்டசபை பொதுத்தேர்தல் வழக்கமான, சராசரியான பொதுத்தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை 100 சதவீதம் உறுதிபடுத்த வேண்டும் என்ற அக்கறையோடு, இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கம் என்ற உரிமை உணர்வுடன், எங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am