விஜய்காந்த் போல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; தினகரன் கணிப்பு
மதுரை: ''தமிழக அரசியலில் விஜய்காந்த் போல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். அது தி.மு.க.,வுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்'' என மதுரையில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறினார்.அவர் கூறியதாவது: தி.மு.க., அரசை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர். தே.ஜ., கூட்டணி தலைவர்கள் சிலரை குற்றவாளிகள் என முதல்வர் கூறுகிறார். குற்றவாளிக்கும், குற்றம் சுமத்தப்பட்டுவர்களுக்கும் உள்ள அர்த்தம் தெரியாமல் முதல்வர் பேசுகிறார். அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am