/ செய்திகள் / விஜய் பேச்சு சிறுபிள்ளைத்தனம்: நயினார் விமர்சனம்

விஜய் பேச்சு சிறுபிள்ளைத்தனம்: நயினார் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என விஜய் சிறுபிள்ளைத்தனமாக பேசிக் கொண்டு உள்ளார் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பிரதமர் மோடி குறித்து தவறாக பேசியவர்கள் மீது திமுக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.திமுக, திமுக அரசு மீது சமூக வலைதளத்தில் மீது பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். சவுக்கு சங்கர் தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை.இந்திரா காலத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் அவசர நிலை நிலவுகிறது. இது ஏப்.,23ம் தேதி முடிவடையும்திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என விஜய் தான் சொல்கிறார்.தேஜ கூட்டணி இபிஎஸ் தலைமையில் ஆட்சி நடத்தியது. இனி வரும் காலத்திலும் எங்கள் கூட்டணி ஆட்சி செய்ய உள்ளது. சிறுபிள்ளைத்தனமாக விஜய் பேசி கொண்டுள்ளார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !