தமிழகத்தில் 'எமர்ஜென்சி'ஆட்சி: நயினார் நாகேந்திரன் காட்டம்
சென்னை''தமிழகத்தில் எமர்ஜென்சி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23ம் தேதியோடு,அது மாற்றப்படும்.,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
வேட்பாளர்கள் தேர்வு குறித்து, தேர்வு கமிட்டி என்ன முடிவு செய்கிறதோ அதுதான் இறுதி முடிவாக இருக்கும்.த.வெ.க.,வின் பிரச்சார கூட்டத்திற்கு சரியான பாதுகாப்பு வழங்காதது, அது போலீஸ் பிரச்சனை. ஆனால் தி.மு.க.,வின் ஐந்தாண்டு காலஆட்சியில், ஆளுங்கட்சிக்கு ஒரு நிலைமையும், எதிர்க்கட்சிக்கு ஒரு நிலைமையும் ஏற்படுத்தி உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டமோ? பிரச்சாரமோ? செய்ய வேண்டும் என்றால், நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்ற ஆணை வாங்கி தான், கூட்டத்தை நடத்தக்கூடிய சூழல் தமிழகத்தில் உள்ளது.
தி.மு.க., ஆட்சியல் பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை, தவறாக பேசியவர்கள் மீது, இதுவரை தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தில் எமர்ஜென்சி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23ம் தேதியோடு,அது மாற்றப்படும்.
தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க.,, ஏற்கனவே ஆட்சி செய்த கட்சி, மீண்டும் ஆட்சி செய்ய போகிற கட்சி. எனவே தே.ஜ., கூட்டணிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே தான் போட்டி.
ஆனால் த,வெ.க., தலைவர் விஜய்,சிறுபிள்ளைத்தனமாக, தி.மு.க.,-த.வெ.க.,வுக்கும் இடையே தான் போட்டி என்று பேசிக் கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்