/ செய்திகள் / ஸ்டாலின் உடன் உடும்பு பிடி உறவு ஏன்: காரணம் சொல்கிறார் திருமா

ஸ்டாலின் உடன் உடும்பு பிடி உறவு ஏன்: காரணம் சொல்கிறார் திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி : பாஜ தமிழத்தில் வளரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் தான், திமுக தலைவர் ஸ்டாலினுடன் உடும்பு பிடி உறவு வைத்திருக்கிறேன், என, விசி கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.கள்ளக்குறிச்சி தொகுதி விசி வேட்பாளர் மாலதியை ஆதரித்து, நைனார்பாளையம், பெரியசிறுவத்துார், தென்கீரனுார் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியின் பல்வேறு சாதனைகள் இந்திய அளவில் பாராட்டப்படுகிறது. பல மாநில முதல்வர்கள், தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றனர். ஜெ., உயிருடன் இருக்கும் போது, பாஜவுடன் கூட்டணி வைத்து எனது வாழ்வில் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன் என்றார். ஆனால், இன்று, அவர்களை அதிமுக தோளில் சுமக்கிறது. லோக்சபா தேர்தலில் மோடியா, லேடியா மோதி பார்க்கலாம் என ஜெயலலிதா துணிச்சலாக சவால் விட்டு கூறினார். பாஜவுடன் எந்த காலத்திலும் அதிமுக கூட்டணி வைக்காது என்றார். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், பாஜவுடன் கூட்டணி வைத்து, அக்கட்சிக்கு ஓட்டுக் கேட்கிறார். தப்பித் தவறி இபிஎஸ் வெற்றி பெற்றால் பாஜகாரர்தான் முதல்வராக இருப்பார். இபிஎஸ்ஐ துாக்கியெறிந்து விடுவார்கள். மெல்ல மெல்ல அதிமுகவை விழுங்கும் வேலையை பாஜ செய்கிறது. இதனை அறிந்தும், இபிஎஸ் துணிந்து ஆதரவு கொடுக்கிறார். தமிழகத்தில் பாஜ காலுான்றி விடக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையோடு திமுக தலைவர் ஸ்டாலின் வலுவான கூட்டணி அமைத்துள்ளார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என நண்பர் (விஜய்) சொன்னார். 'விசில்' அடித்து வாருங்கள், வாருங்கள் என்றும் கூவினார். ஆனால் யாரும் அவருடன் செல்லவில்லை. 'சீட்' கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மற்ற அணிக்கு செல்லாமல் திமுகவுடன் பல கட்சிகள் கூட்டணியில் உள்ளது. பாஜ தமிழகத்தில் வளரக்கூடாது என்பதால் தான், திமுக தலைவர் ஸ்டாலினுடன், உடும்பு பிடி உறவு வைத்திருக்கிறேன்.இந்த தேர்தல் திமுக - அதிமுகவுக்கு இடையே நடக்கும் யுத்தம் இல்லை. பிற்போக்கு சக்திக்கும், முற்போக்கு சக்திக்கும் இடையே நடக்கும் யுத்தம். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கையை வலுப்படுத்த வேண்டும். தேர்தலில் விசி வேட்பாளர் மாலதிக்கு பானை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

MARUTHU PANDIAR
ஏப் 10, 2026 07:42

பா ஜ இல்லாம இங்க பொழப்பு நடக்காது. அதன் எத்திக் கொண்டே இருந்தால் தான் மாடலின் கடைக்கண் பார்வை.


surya krishna
ஏப் 10, 2026 05:52

வேற என்ன காசு பணம் துட்டு மணி மணி. திராவிட மாடல் கொள்ளை அடிச்சு குடுக்குற காசு வாங்கி கொழுத்து போய் வெளியே வராமல் கொத்தடிமையாக இருக்காப்ல வேற என்ன


SUBBU,MADURAI
ஏப் 10, 2026 05:38

திமுக கூட்டணிக்கு நேத்து வந்தவனெல்லாம் அதிக தொகுதியும் சொளையா ராஜ்யசபா சீட்டும் வாங்கிட்டு போறானுக. நீங்களும் காலங்காலமா கொத்தடிமையா திமுக கூட்டணியில் இருக்க ஆனா ஏழெட்டு சீட்டுக்கு மேல உமக்கு தரமாட்டேன்றானுக அதுவும் பொதுத் தொகுதி கிடையாதாம் ரிசர்வ் தொகுதி மட்டும்தானாம், இந்த லட்சணத்துல உமக்கு பேரு எழுச்சித்தமிழர்!


Sun
ஏப் 10, 2026 05:16

பாவம் வி.சி.க கட்சியை தி.மு.க விழுங்கி ரொம்ப நாளாகி விட்டதை மறந்து விட்டு பேசுகிறார் திருமா. வி.சி.க என்ற ஒரு கட்சி இன்று இவரது கட்டுப்பாட்டில் இல்லை. இவரால் இவரது கட்சிக்குள் சுயமாக இயங்க முடியவில்லை.ஸ்டாலின் நில் என்றால் திருமா நிற்கிறார். உட்காரு என்றால் உட்காருகிறார். அண்மையில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தானே போட்டி இடுவதாக திருமா அறிவித்தார். தி.மு.க மிரட்டியவுடன் பணிந்து ஜகா வாங்கி வேறு ஒருவரை அந்த இடத்தில் நிறுத்துகிறார். அதுவும் சொந்த வி.சி.க கட்சிக் காரனை நம்பாமல் காங்கிரசில் சீட் கேட்ட ஒருவரை வலிய கூட்டி வந்து அந்த இடத்தில் நிறுத்துகிறார். வின்னர் திரைப்படத்தில் வில்லன்களிடம் அடி வாங்கி விட்டு உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு என வீர வசனம் பேசுவாரே வடிவேலு? அந்த வடிவேலு நிலைதான் இன்றைய திருமா நிலையும்.


sankaranarayanan
ஏப் 10, 2026 01:42

குருமா கத்து கத்து அப்போதான் இன்னும் கொஞ்சம் பெரிசா பெட்டி வந்து சேரும் கூடவே ஒய்வு எடுக்க நாற்காலிகளும் வரும் பிறகு ஆட்சியில் பங்கு என்பார் அதற்கு ஒரு பெட்டி வரும் இவருக்கும் பெட்டி திருமாவளவன் என்றே பெயர் விடலாமே i


எழுச்சி dumilan, மதுரை
ஏப் 09, 2026 23:38

என்ன பெரிய சிதம்பர ரகசியம். எல்லாம் அந்த பிளாஸ்டிக் சேர், சமூக நீதி, பா சா கா உள்ளே வந்துடும் அப்புறம் அந்த பெட்டிகள்...


Vasan
ஏப் 09, 2026 23:18

தமிழகத்தில் திருமா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதில் திமுகவும் பங்கேற்க வேண்டும், திருமா கொடுப்பதை திமுக வாங்கிக்கொள்ள வேண்டும்.


anonymous
ஏப் 09, 2026 23:15

பெட்டி தான்


Kannuchamy
ஏப் 09, 2026 23:00

சப்பைகட்டு கட்டாதா பெட்டி பெருசா பெருசா வருதுன்னு சொல்லு. விஜய் கிட்ட போன ஒன்னும் கிடைக்காது. நமக்கு சீட்டா முக்கியம்.பெட்டி தான் முக்கியம்.