ஏன் என் வீட்டில் சோதனை நடத்தவில்லை: கேட்கிறார் சீமான்
புதுச்சேரி : '' ஏன் எனது வீட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை,'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.புதுச்சேரியில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருந்து தீர்த்த பிரச்னை எது என்று சொல்ல முடியுமா? மாநிலங்கள் கொடுக்கும் நிதி தான் மத்திய அரசுக்கு நிதி.அப்புறம் அவன் என்ன எனக்கு தருவது? மத்திய அரசுக்கு வருவாய்க்கு என ஏதும் உள்ளதா? மாநிலங்கள் தரும் நிதி தான் மத்திய அரசின் நிதி.
கோபம்
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்து சிலர் தவெக என கோஷம் போட்டனர். இதனால், கோபம் அடைந்த சீமான் அவர்களை ஒருமையில் திட்டினார். நாதகவினர் அறிவார்ந்தவர்கள். தவெகவினர் கோமாளிகள், தற்குறிகள் என்றார். அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு அதனை கலைத்தனர்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am