/ செய்திகள் / ஏப்ரல் 3ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை?

ஏப்ரல் 3ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, ஏப்., 3ம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழகத்திலும் பிரசாரம் செய்ய வருமாறு, பா.ஜ.,வினர் அழைப்பு விடுத்து உள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ. - அ.தி.மு.க., இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்., 3ம் தேதி மோடி பிரசாரம் செய்கிறார். இதற்காக கேரளாவில் இருந்து சென்னை வந்து, புதுச்சேரி செல்கிறார். தமிழக தேர்தலுக்கு, தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து, கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. அ.தி.மு.க., சார்பில், 23 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். எனவே, புதுச்சேரி வரும் மோடி, தமிழகத்திலும் பிரசாரம் செய்ய வேண்டும் என, பா.ஜ.,வினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !