காங்கிரஸ் இருக்கும் இடத்தில் மதச்சார்பின்மை காக்கப்படுமா?: வைகோ சந்தேகம்
சென்னை: ''காங்கிரஸ் இருக்கும் இடத்தில் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும் என்று சொல்ல முடியாது,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார். அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், மும்மொழிக் கொள்கையை எக்காரணம் கொண்டும், த.வெ.க., அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. லோக்பவன் நிகழ்ச்சியில், 'வந்தே மாதரம்' பாடலை, கவர்னர் திணிக்கிறார். தமிழக அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில், வந்தே மாதரத்திற்கு இடம் கொடுக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், பின், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும். த.வெ.க., ஆட்சிக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுப்போம். அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள்; போகப்போக படிப்பினைகளை கற்றுக் கொள்வர். கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் பிரிந்து சென்றதால், தி.மு.க.,வுக்கு எந்த பின்னடைவும் கிடையாது. காங்கிரஸ் இருக்கும் இடத்தில்தான் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும் என சொல்ல முடியாது. 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக த.வெ.க., ஆட்சியை பிடித்து விட்டதாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறுவது, அவர் மனதில் இருந்து சொல்லும் கருத்து. அந்த கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 23 )
உனக்கெல்லாம் வெட்கம் மானம் ஈனம் என்று ஏதாவது இருக்கிறதா?
நாயுடு காரு அமெரிக்க குடும்பமே பாவ மன்னிப்பில் சேர்ந்து பல வருடங்கள் ஆகிறது. இங்கே வியாபாரம். அங்கே விளைச்சல்.
காங்கிரஸ் த.வெ.க பக்கம் போனதால் இந்த வைகோவுக்கு இப்போது திடீரென சந்தேகம் வந்துவிட்டது
மதச்சார்பின்மை மதவாதம் சமூக நீதி ஒன்றிணைவோம் வா எல்லாம் புளித்து போன வசனங்கள். புதுசா ஏதாச்சும் சொல்லுங்க
இன்னுமா பேசிக்கிட்டு இருக்கு ????
கண்டிப்பா, சபையில் பைபிள் பிரச்சாரம் செய்யப்படும், மதசார்பில்லா முஸ்லீம் லீக்குடன் சேர்ந்து சனாதானத்தை எதிர்ப்போம்.
இம்முறை - வந்தேமாதரம் தமிழில் பாடப்பட்டது சார்
தேவாரம் திருவாசகம் நாலாயிர பிரபந்தம் போன்ற பாடல்களுக்கு பாமரரும் புரிந்து கொள்ளும் விதத்தில் உரை ஆற்றி நீங்கா புகழ் பெருங்களேன் ..இன்னொரு கண்ணதாசனாக மறைந்த பின்னும் மக்களின் மனதில் வாழலாம் ...
அதில் என்ன சந்தேகம்.... அவர்கள் தானே மதசார்பின்மை (அதாவது இந்துக்களுக்கு எதிரான) மொத்தமாக குத்தகைக்கு எடுத்து இருக்கிறார்கள்.
வந்தே மாதரம் என்றால் என்ன தாய் மண்ணே வணக்கம் இது சொல்வது தவறா. இது என்ன மோடி இயற்றிய பாடலா வங்கதேச கவிஞர் இயற்றிய பாடல் தேசபக்தி பாடல் அதில் நம்பிக்கை இல்லையா உஙகளுக்கு. புளித்துப்போன மதச்சார்பின்மையை வைத்துக்கொண்டு இனிமேலும் அரசியல் செய்ய முடியாது.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am