/ செய்திகள் /  தமிழக காங்., தலைவர் விரைவில் மாற்றம்?

 தமிழக காங்., தலைவர் விரைவில் மாற்றம்?

- நமது நிருபர் - வருமான வரித்துறை சோதனை விவகாரம் தொடர்பாக, தமிழக காங்., முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கருத்து கேட்டதைத் தொடர்ந்து, தமிழக காங்., தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, 'சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் என, சொல்லிக் கொண்டு, ஹிந்தி பேசும் நபர்கள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.

நாடகம்

அவருக்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், முதல்-வர் ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால்,'செல்வப்பெருந்தகை கூறியது போல், அவரது வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'ராகுல் பேச்சை தவறுதலாக, செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்ததால், அவர் பிரசாரத்திற்கே வரக்கூடாது என, ராகுல் கூறியுள்ளார். அதை மறைக்க, செல்வப்பெருந்தகை நாடகம் ஆடுகிறார்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இந்நிலையில், செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறை தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவும், வருமான வரித்துறை வலியுறுத்தி உள்ளது.

'அப்செட்'

இந்நிலையில், சென்னைக்கு நேற்று முன்தினம் வந்த கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம், வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக சொல்லப்படும் விவகாரத்தில், யார் சொல்வது உண்மை என விசாரித்துள்ளார். அவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளை, ராகுலிடம் வேணுகோபால் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை செயலால், ராகுல் 'அப்செட்' ஆகி உள்ளார். எனவே, சட்டசபை தேர்தலுக்கு பின், தலைவர் பதவியிலிருந்து செல்வப் பெருந்தகை மாற்றப்படுவார் என, எதிர் கோஷ்டியினர் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என, செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 22, 2026 22:05

பாஸ் விஜய் கூட கூட்டணி வைக்க கூடாதுன்னு இவனும் சைடும்பரம் பண்ண அரசியல் இப்போ காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு தரும், அதுனால தான் முன்னாடியே எலெக்ஷன் அப்புறம் ராஜினாமா னு பீதியது, இவனும் சிதம்பரம் இருவரும் எலெக்ஷன் அப்புறம் காங்கிரஸ் கட்சியில் காணாமல் போவார்கள், அடுத்த எலெக்ஷன் விஜய் காங்கிரஸ் கூட்டணி கண்டிப்பா வரும்


ஆகுயர்தான்
ஏப் 22, 2026 21:21

தேர்தலுக்குப் பின் டீய மூ கா வில் அதிகாரப்பூர்வமாக இணைவார். எப்போவோ துண்டு போட்டாச்சு. இவர் குறிபிட்ட சேர்ந்தவர் என்பதால் தான் இங்கே இவ்ளோ பதிவு அர்ச்சனை...


முரளிமோகன்
ஏப் 22, 2026 14:29

இக்காலத்திற்க்கு ஏற்றார் மாற்றம் வரவேண்டும் அரசியலிலும் சரி , அரசு உத்யோகத்திலும் எல்லாவற்றுக்கும் இடஒதுக்கீடு என்பதே இருக்க கூடாது.


rajendran abudhabi
ஏப் 22, 2026 12:25

செல்வப்பெருந்தொகை வந்து விட்டது. கட்சித் தலைமைக்கு லாயக்கு இல்லாதவர். நீக்கப் பட வேண்டியவர். பொய் வண்டி .Income tax டிபார்ட்மெண்ட் நன்றாக இவர் மூக்கை உடைத்தார்கள்.


RAVINDRAN.G
ஏப் 22, 2026 12:14

செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்துவிடுவார். 2026 தேர்தலிலும் தோற்பார்.


Vasan
ஏப் 22, 2026 11:40

Congress can close its Tamilnadu branch.


Sivak
ஏப் 22, 2026 11:21

இந்த மாதிரி ரவுடிகளை கட்சி தலைவரா போடற அளவுக்கு கேவலமான நிலைமைக்கு போய்டிச்சி காங்கிரஸ் .... உபயம் : திருட்டு திமுக


Santhakumar Srinivasalu
ஏப் 22, 2026 11:18

அடுத்த தலைவர் வந்தா மட்டும் மத்திய/மாநில அரசு இவங்க கையில வந்துருமா? கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா வீடுகளில் மட்டும் காங். கொடி பறக்கும். அதுவும் அம்மாவும் மகனும் இத்தாலி சொத்தை காப்பாத்த கிளம்பினாலும் ஆச்சரியமில்லை?


duruvasar
ஏப் 22, 2026 11:11

தலைப்பை மாற்றுங்கள் . இவர் ஒரு அக்மார்க் திமுகக்காரன். திமுகவின் அணைத்து " நற் குணங்களையும் ஒருசேர பெற்றவர் .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 22, 2026 10:27

ஆம்ஸ்டிராங்கை கொலையை நிரூபிக்க எடப்பாடியார் நடவடிக்கை எடுப்பார் ........