/ செய்திகள் /  உங்கள் வாக்கு உங்கள் குரல்: விழிப்புணர்வு கோலப்போட்டி

 உங்கள் வாக்கு உங்கள் குரல்: விழிப்புணர்வு கோலப்போட்டி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், சட்டசபை தேர்தலில் நுாறு சதவீதம் ஒட்டுபோட வலியுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில், வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டுப்போட வலியுறுத்தி, பல்வேறு விழப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவி குழுவினர், தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்தனர். தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பாலுன் பறக்கவிடப்பட்டுள்ளது. கலெக்டர் மாலதி ெஹலன் விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்டார். இதில், தேர்தல் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !