20 ஆண்டுகள் ஒரே வாக்குறுதி 'மாத்தி யோசி மாப்ள'
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வில் சேகர், தி.மு.க.,வில் மூர்த்தி, நா.த.க.,வில் அரவிந்த், த.வெ.க.,வில் நந்தகுமார் போட்டியிடுகின்றனர். நான்கு முனை போட்டியால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக லோக்சபா, சட்டசபை தேர்தல்களின் போது கொடுக்கப்பட்டு வரும் பழைய வாக்குறுதிகளான, 'ப.வேலுாருக்கு மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் கொண்டு வருவோம்; ராஜா வாய்க்காலை, 'ரீ மாடலிங்' செய்வோம்; தீயணைப்பு நிலையம் கொண்டு வருவோம்; பிலிக்கல்பாளையத்தில் இருந்து காவிரியின் குறுக்கே பாலம் கட்டி, ஈரோடு மாவட்டம், கொடுமுடியுடன் இணைப்போம்' என, பழைய பல்லவியையே பாடுவதால், மக்களிடையே சலிப்பு தட்டி, பிரசாரத்தை கண்டும் காணாமல் போய்விடுகின்றனர்.
இதை, வேட்பாளர்களுடன் செல்லும் உறவினர்கள் கவனித்து, 'புதிய வாக்குறுதிகளை அள்ளி வீசி, வாக்காளர்களை உற்சாகப்படுத்துங்க மாப்ள; இல்லனா ஓட்டு விழாது. மாத்தி யோசிக்கணும் மாப்ள' என, வேட்பாளர்களின் காதுகளில் ஓதுகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்