Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பாஜவை பார்த்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்; நயினார் நாகேந்திரன்

பாஜவை பார்த்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்; நயினார் நாகேந்திரன்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கன்னியாகுமரி: தமிழகத்தில் பாஜவை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது என்று தமிழக பாஜ தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
அவரது பேட்டி;
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஒரு திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க தமிழக அரசுக்கு சரியான அதிகாரிகள் இல்லை. சரியான வழிகாட்டுதல் இல்லை.
ஒரு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் என்றால் 20 மீட்டர் இடம் வேண்டும். ஆனால் இவர்கள் 5 மீட்டர் வேண்டும், 10 மீட்டர் வேண்டும் என்று தப்புத்தப்பாக விரிவான திட்ட அறிக்கை தந்ததால் தான் மெட்ரோ ரயில் வர முடியவில்லையே தவிர, மற்றபடி வேறு ஏதுவும் இல்லை.
இன்றைக்கு பாஜவை பார்த்தால் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இவர்களின் ஊழல்கள், ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், அனைத்து வழக்குகளையும் கையில் எடுத்து விடுவோம் என்பதால் இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement