Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


சட்டசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு; இன்று ஒரே நாளில் ஆயிரம் பேர் மனு

சட்டசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு; இன்று ஒரே நாளில் ஆயிரம் பேர் மனு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒருநாளே எஞ்சியுள்ள நிலையில், இன்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக, நாதக,தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், கடந்த மார்ச் 30ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு தினமே உள்ளது.
சட்டசபை தேர்தலுக்காக 3வது நாளாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட, சுயேட்சை வேட்பாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், சக்கரபாணி, டிஆர்பி ராஜா, நாசர் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சிந்தனைச் செல்வன், அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி, விசிக வேட்பாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
முதல் நாளில் 573 பேரும், 2வது நாளில் 788 பேரும் என மொத்தம் 1,361 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், இன்று 3வது நாளாக இத்தனை பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம், சட்டசபை தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

Advertisement