நடிகர் மீதான ஆசை... பெண்கள் பற்றி அமைச்சர் சர்ச்சை பேச்சு
நமது நிருபர்
''இளம்பெண்கள் நடிகர் மீது ஆசை வைத்துள்ளனர். அந்த நடிகர் யார் என, வெளிப்படையாக கூற முடியாது. அவர்கள் ஓட்டு மாறிவிடாமல் இருக்க, நம் கட்சி பெண்கள் வீடு வீடாக சென்று, பெண்களிடம் பேச்சு நடத்த வேண்டும்,'' என, அமைச்சர் அன்பரசன் பேசினார்.
ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, குன்றத்துார் பூந்தண்டலம் ஊராட்சியில் நடந்த, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: இளைஞர்கள் எல்லாம் நடிகை மீது ஆசை வைத்துள்ளது போல், இளம்பெண்கள் நடிகர் மீது ஆசை வைத்துள்ளனர். அந்த நடிகர் யார் என்று வெளிப்படையாக பேச முடியாது. ஓட்டு மாறிவிடப்போகிறது.
நாம் பூத் அளவில் 10 பெண்களை நியமித்துள்ளோம். அவர்கள் எல்லாம் காலையும், மாலையும் பூத்வாரியாக சென்று, பெண்களை மட்டும் சந்தித்து, தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். பூத் கமிட்டியில் உள்ளவர்கள் ஊரைவிட்டே வெளியே செல்லக்கூடாது.
பூத் கமிட்டியில் உள்ள இளைஞர்கள், தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை மட்டும் சந்தித்து ஓட்டு கேட்க வேண்டும். ஓட்டுகள் குறைந்தால் சும்மா விடமாட்டோம். ஆறு மாதத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் வேலை செய்யாதவர்கள் கவுன்சிலராகக்கூட வரமுடியாது. மிரட்டுகிறேன் என நினைக்காதீர்கள். கட்சி பணியை தான் செய்ய சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்