உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு
திருப்பூர்: திருப்பூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகே, வடக்கு உழவர் சந்தை பகுதியில் நேற்று காலை, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கேரட், முள்ளங்கி, தக்காளி, பூண்டு, பெரிய வெங்காயம், வெண்டை காய், கீரை, முட்டை கோஸ், பீட்ரூட், வாழை பூ, பச்சை மிளகாய, வாழை தண்டு உள்ளிட்ட காய்கறிகளை பயன்படுத்தி, தேர்தல் நாள், மை வைக்கப்பட்ட விரல், தேர்தல் கமிஷனின் லோகோ ஆகியவற்றை உருவாக்கி நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, வேளாண் இணை இயக்குனர் ஆதிசாமி, துணை இயக்குனர் (வேளாண் விற்பனை வணிகம்) சண்முகசுந்தரம் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த நுகர்வோர், விவசாயிகள், வியாபாரிகளுக்கு தேர்தல் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்