தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்காத அரசியல் கட்சியினர்
கும்மிடிப்பூண்டி: தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக, கட்சி கொடியுடன் கார்களில் வலம் வரும் அரசியல் கட்சியினர் மீது தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என. சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேர்தல் தேதி அறிவித்த போதே, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. மறுநாளே கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில், அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கட்சியினருக்கு விளக்கமாக கூறப்பட்டது. குறிப்பாக, வாகனங்களில் உள்ள கட்சி தலைவர், கொடி, சின்னம் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த விதிமுறையை கண்டுகொள்ளாத அரசியல் கட்சியினர் பலர், கட்சி கொடியுடன் கார்களில் வலம் வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமீறி, கட்சி கொடியுடன் காரில் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி தேர்தல் அலுவலர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்