ராமதாஸ் கட்சி வேட்பாளர் அன்புமணியிடம் ஐக்கியம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி ராமதாஸ் கட்சி வேட்பாளர் புகழேந்தி நேற்று அன்புமணியிடம் ஐக்கியமானார்.
அன்புமணி தலைமையிலான பா.ம.க.,வை தேர்தல் கமிஷன் அங்கீகரித்த நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றுள்ளது.
அக்கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் ராமதாஸ் கட்சி வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
விக்கிரவாண்டியில் பா.ம.க., வேட்பாளராக சிவகுமார் போட்டியிடுகிறார். இங்கு ராமதாஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி நேற்று தன் ஆதரவாளர்களுடன், சென்னை பனையூரில் அன்புமணியை சந்தித்து, பா.ம.க.,வில் இணைந்தார்.
இதையடுத்து, புகழேந்தியை தன் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், 'விக்கிரவாண்டி வேட்பாளராக, தன் கட்சி மாவட்ட தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவார்' என அறிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தன் கட்சியின் பொதுச் செயலர் முரளிசங்கரை, காட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளராக மாற்றுவதாகவும் ராமதாஸ் அறிவித்தார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்