Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.நகர் சத்யா வெற்றிக்கு சிறப்பு பூஜை

 தி.நகர் சத்யா வெற்றிக்கு சிறப்பு பூஜை

அசோக் நகர்: தி.நகர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தி.நகர் பி.சத்யா வெற்றிக்காக, சக்தி மகளிர் நல மேம்பாட்டு குழு சார்பில், 'ஸ்ரீ மகா பெரியவா அனசு பூஜை' நடத்தப்பட்டது.

தி.நகர் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., தி.நகர் பி.சத்யா போட்டியிடுகிறார். இவர், 117 வது வார்டு வட்ட மேலமைப்பு பிரதிநிதி ஆக அரசியல் பணியை துவங்கி, எம்.ஜி.ஆர்., மன்ற பகுதி இணை செயலர், ஜெயலலிதா பேரவை பகுதி செயலர், பேரவை மாவட்ட பொருளாளர், தி.நகர் பகுதி செயலர், மாவட்ட செயலர் என, படிப்படியாக உயர்ந்தார்.

பின், 2011ம் ஆண்டு, சென்னை மாநகராட்சி 130 வது வார்டு கவுன்சிலராக தேர்வானார். பின், 2016ல் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வானார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 137 ஓட்டு வித்யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது, மீண்டும் தி.நகரில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வார்டு வார்டாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, அசோக் நகர் 9 வது அவென்யூவில் உள்ள சக்தி மகளிர் நல மேம்பாட்டு குழு சார்பில் ஆன்மீகவாதி சத்தீஷ்வரன் என்பவர் அ.தி.மு.க., வேட்பாளர் தி.நகர் சத்யாவிற்கு ஆதரவாக, 'ஸ்ரீ மகா பெரியவா அனசு பூஜை' நடத்தியுள்ளார். பின் சத்தீஷ்வரன் கூறுகையில், ''விநாயகர் சதுார்த்திக்கு, அயோத்தியா மண்டபத்தில் பக்கத்தில் விநாயகம் சிலை அமைக்க, தி.நகர் சத்யா உதவி செய்தார்.

நாம் பிராமண சமூகம் நன்றாக இருக்க, நாம் அனைவரும் அ.தி.மு.க., வேட்பாளர் தி.நகர் சத்யாவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement