அப்பன் வீட்டு சொத்தை விற்றா ரூ.5,000 கொடுத்தனர்: சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை, காட்டங்கொளத்துாரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
மலை, காடுகளை உருவாக்க முடியாதபோது, அடிப்படை அறிவில்லாதவர்களிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு, அவற்றை அழித்து வருகின்றனர். படிப்பவர்களுக்கு அரசியலை விட சிறந்த கல்வி ஒன்றும் இல்லை; அரசியல் படிப்பதும் பேசுவதும் அவசியம்.
இலவசத்தை அறிவிப்பது கேடுகெட்ட ஆட்சிமுறை. ஆள் மாற்றம் தான் நடக்கிறது; ஆனால், ஆட்சி முறை மாறவில்லை. எந்த கட்சி வந்தாலும், சாராயம், பாலியல் கொடுமை, லஞ்சம், ஊழல், கொள்ளை, கொலை என எதுவும் மாறவில்லை.
ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் முதலீடு செய்து, லாபம் பார்க்கின்றனர். பணம் வாங்கிய மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஓட்டுக்கு பணம் வாங்கும் இடத்தில், ஜனநாயகம் செத்து விடுகிறது.
மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் தி.மு.க., 5,000 ரூபாய் கொடுத்தது, அது அப்பன் அல்லது பரம்பரை சொத்துக்களை விற்பனை செய்து கொடுத்த பணமா? அந்த பணத்தை எங்கிருந்து எடுத்தனர் என்பதை சிந்தித்தால் மட்டுமே மாற்றம் நிகழும்.
நீங்கள் பட்டினி கிடந்து இறந்தால், கட்டையில் எரிக்காமல் மின்சாரத்தில் எரிப்பது தான் வளர்ச்சியாக உள்ளது. ஆன்லைனில் பிச்சை எடுப்பது தான் வளர்ச்சியாக உள்ளது. பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்கவில்லை.
இங்கே மக்கள் அரசியல் இல்லை; விளம்பர அரசியல் தான் உள்ளது. தேர்தல் வரும்போது தான், மக்கள் மீது 2,000, 3,000 ரூபாய் என்ற பாசம் வந்து விடுகிறது. கூட்டணி அமைத்தும் ஓட்டுக்கு பணம் தருகின்றனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லாட்சி தர வேண்டும்.
கொள்கை இல்லாத அரசியல், பாவம். உங்களுக்கான தலைவனை பொழுதுபோக்கு தளத்தில் தேடாமல் போராட்ட களத்தில் தேடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
எந்த இலவசமும் மக்களுக்கு இல்லாவிட்டால் என்ன நிகழும்?
1. பயணக்கட்டணம் செலுத்தி பேருந்தில் செல்பவர்களால் போக்குவரத்து கழகம் இலாபத்தில் இயங்கும். அதனால் புதிய, வசதியான பேருந்துகளை வாங்க இயலும் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம், ஓய்வூதிய பயன்கள் கிடைக்கும். இலவச பேருந்தில் பயணிப்பவர்கள் குடும்பத்திலும் போக்குவரத்து ஊழியர்கள் இருப்பார்கள்.
2. எல்லோரும் மின்கட்டணம் செலுத்தி பயன் அடைவார்கள் எனில் மின்கட்டணம் வெகுவாக குறையும், தடை இல்லா மின்சாரம் பெற முடியும், சிறந்த மின் உபகரணங்களை அரசால் வாங்க முடியும்.
3. அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெறாவிட்டால், வாங்காதவர்களின் பொருட்களை யாரோ ஒருவர் வெளி மார்க்கெட்டில் விற்று கொழுப்பதை தவிர்க்க முடியும்.
4. இலவச வேஷ்டி புடவை வாங்காவிட்டால் தரமற்ற பொருட்களை கொடுக்க முடியாது அதனால் அரசுக்கு செலவு மிஞ்சும். ஊழல் நடக்கவும் வாய்ப்பு இல்லாமல் போகும்.
5. இலவச அன்பளிப்புகளை வாங்காவிட்டால் மன சாட்சி படி நல்லவர்களை தேர்தலில் நம் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க முடியும்.
இலவசங்களே இல்லாவிட்டால் தரமான சாலைகள், சுகாதாரமான குடிநீர், உலக சிறந்த மருத்துவம், உயர் தர கல்வி கல்வி கூடங்கள், வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடிய தொழிற்சாலைகள், சேமிப்பு கிடங்குகள், தடையில்லா மின்சாரம் என்று எல்லாமே சாத்தியம். இலவசங்களை, அன்பளிப்புகளை, லஞ்சம் வேண்டாம் என அனைவரும் சொல்லுவோம்.
அப்பன் வீட்டு சொத்து ஏதுமில்லை எல்லாம் கதை எழுத்து வாழ்க்கையில் ஒரு சில கோடிகள் இருக்கலாம். எல்லாமே தமிழர் வரி பணம் தான். முதலை முதல் முதலாளி வரை இப்ப 12 லட்சம் கோடி முதல் 16 லட்சம் கோடி இருக்கலாம். என்ன முடியுமா ? கலைஞரை விட உதய் துர்க்க மருமகன் சம்பாதித்தது அதிகம்.
Seeman is right and makes sense, There should not be freebies, Freebies given from tax money nothing from his party or family.
மக்களே கொஞ்சம் நன்றாக யோசியுங்கள். சீமான் கூறுவது போல இதையெல்லாம் அவன் அப்பா வீட்டு பணத்திலிருந்து கொடுக்கவில்லை. நமது ஓட்டு மொத்த மக்களின் கஷ்டப்பட்டு கொடுக்கும் வரிப்பணத்தை, தானும் தன்னுடைய குடும்பமும், அடிபொடிகளும் வசதியாக வாழ இலவசங்கள் என்ற பெயரில் வாரி இறைத்துவிட்டு மக்களை மீண்டும் மீண்டும் அடிமையாகவே வைத்திருக்கிறது இந்த திருட்டு திராவிடியா கும்பல். அவர்கள் கொடுக்கும் இலவசங்கள் எதுவும் நிரந்தரமல்ல. தொடர்ச்சியாக கொடுக்கவும் முடியாது. வேலைவாய்ப்புக்களை உருவாக்கி மக்களை உழைத்து தன்மானத்துடன் வாழ வழி செய்வதுதான் நிரந்தரமான ஒன்று. உங்களை ஏமாற்றுவதற்காக இலவசம் கொடுப்பவர்களை தவிருங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சுற்றத்தாருக்கு இதை பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நல்ல தலைவனுக்கு வாக்களிக்க சொல்லுங்கள். நம் சந்ததிகளுக்காக இதை நாம் செய்தே ஆகவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
சீமான் அண்ணே. டாஸ்மாக் பணம் 5000 ரூபாயாக வந்து, திரும்ப டாஸ்மார்க் போகுதுன்.
He is not realising one thing that without power you cannot do
Anything to people
He need to join alliance , win members and help needy people, else he will keep shouting on roads and help other parties to come power

dmk didnt give 1000 in advance and 2000 extra from party or personal funds. all public tax money. it is crime to use public money for election funding. seeman should file PIL for this in supreme court