Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ரூ.5,000 கிடைக்காதவர்கள் அதிருப்தி; மீண்டும் ஆசை காட்டும் தி.மு.க., அரசு

ரூ.5,000 கிடைக்காதவர்கள் அதிருப்தி; மீண்டும் ஆசை காட்டும் தி.மு.க., அரசு

சென்னை: மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு, 5,000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்தத் தொகை கிடைக்காதவர்களை சமாதானப்படுத்த, ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக, அவர்களுக்கு தி.மு.க., அரசு ஆசைகாட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில், கடந்த 2023 செப்., 15 முதல், 1.31 கோடி குடும்பத் தலைவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் 3,000 ரூபாய், கோடைக்கால சிறப்பு நிதியாக 2,000 ரூபாய் என, 5,000 ரூபாய், கடந்த பிப்., 13ல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதை பெரும் சாதனையாக, தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வந்தாலும், 5,000 ரூபாய் கிடைக்காத ஒரு கோடி குடும்பத் தலைவியர், தி.மு.க., அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதை, பல்வேறு நிறுவனங்கள் எடுத்த சர்வே வாயிலாக தி.மு.க., அறிந்தது. அவர்களின் கோபம், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களின் கோபத்தை சரிக்கட்டும் முயற்சியில், தி.மு.க., அரசு இறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, 5,000 ரூபாய் கிடைக்காதவர்களை, ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக, மொபைல் போனில் அழைத்து, 'உங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கச் சொல்லி, அரசு தரப்பில் ஏற்பாடு செய்துள்ளனர். 'அதற்கு சில விபரங்கள் தேவைப்படுகின்றன. விபரங்களோடு, ரேஷன் கடைக்கு நேரில் வாருங்கள்' என அழைப்பு விடுக்கின்றனர்.
அதன்படி ரேஷன் கடைக்கு செல்லும் குடும்பத் தலைவியரிடம், 'சொந்தமாக வீடு, நிலம், வீட்டுமனை, கார் உள்ளதா; குடும்பத்தில் யாரேனும் அரசுப் பணியில் உள்ளனரா; மாத வருமானம் எவ்வளவு?' என்ற விபரங்களை கேட்கின்றனர்.

அனைத்தையும் கேட்டுவிட்டு, 'உங்களுக்கு வரும் மே மாதத்தில் இருந்து, உரிமைத்தொகை கிடைக்க வழி செய்கிறோம்' எனக்கூறி அனுப்புகின்றனர்.

இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'மகளிர் உரிமைத்தொகை, 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டபோது, கிடைக்காதவர்களுக்கு வருத்தம் இருந்தாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

'ஒரே தவணையில் 5,000 ரூபாய் கொடுத்ததும், கிடைக்காதவர்களின் வருத்தம் அதிகமாகிவிட்டது. கிடைக்காதவர்களுக்கும், எப்படியாவது உரிமைத்தொகையை கொடுக்க வேண்டும் என அரசு தரப்பில் திட்டமிடுகின்றனர். அதற்காக, தகுதியானவர்களை கண்டறியும் பணி, ரேஷன் கடைகள் வாயிலாக நடக்கிறது' என்றார்.

Advertisement

மார் 04, 2026 07:12 pm

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் கூறியது தான் ஆசையை தூண்டி ஏமாற்று என்பது. எலிபத்தியம் என்ற மலையாள திரைப்படம் ஏமாற்றும் அரசியல்வாதி மற்றும் அந்த பொறியில் சிக்கும் மக்களை படம் போட்டு காட்டியது. மக்கள் திருந்த மாட்டேன் என அடம் பிடித்தால் என்ன செய்வது?

Reply Rate this
மார் 04, 2026 06:45 pm

மக்களுக்கு குடுத்தா வயிறு எரிவது ஏன்....

Reply Rate this
மார் 04, 2026 12:51 pm

இலவச கழிப்பறை வசதி, இலவச கல்வி சேவை, சிறந்த இலவச மருத்துவமனை, வேலை வாய்ப்பு, இலவச முதியோர் இல்லம், இந்த தொகை எவ்வளவோ செய்யலாம், மக்கள் திருந்தவே மாட்டார்கள்..

Reply Rate this
மார் 04, 2026 11:10 am

ஐயா அடுத்தது குளிர் காலம் வருது சரக்குக்கு அட்டைக்கு 5000 முன்கூட்டியே போட்டாஅடுத்ததும் கண்டிப்பா நம்ம ஆட்சிதான் ஐயா.

Reply Rate this
மார் 04, 2026 10:26 am

அன்றாடம் ஆங்காங்கு கொலை... கற்பழிப்பு .... லட்சம் லட்சமாகவே கொடுத்தாலும் கூட வாழத்தகுதியற்ற மாநிலத்தில் வாழ முடியுமா? சிந்தியுங்க மக்களே .....

Reply Rate this
மார் 04, 2026 10:15 am

நாங்கள் எப்படி அலங்கோல ஆட்சி செய்தாலும் பணத்தைத் தூக்கிப்போட்டா மக்கள் எங்களைத்தான் தேர்தெடுப்பார்கள் ...

Reply Rate this
மார் 04, 2026 05:19 am

மக்களின் வரிப்பணத்தில் தண்டச் சம்பளம் வாங்கும் கேடுகெட்ட தேர்தல் ஆணையம் இருக்கும் வரை இது போன்ற கொள்ளையர்களுக்கு கவலையில்லை.

Reply Rate this

இதையெல்லாம் நீதிபதிகள் கவனித்து கொண்டுள்ளாரென நினைக்கிறன்? தானா முன்வந்து வழக்கு பதிவு செய்து இந்த பணத்தினை எல்லாம் திமுக கட்சியின் நிதியிலிருந்து எடுத்து கொள்ளவேண்டும் என்று ஆணை வருமா

Reply Rate this
அரசு ஊழியர்களுக்கு ரூ 25000 கோடி பென்சன் பற்றி எந்த நீதிபதியும் பேசுவதில்லை . ஆனால் இந்த 2000 கோடி உதவி தொகையை மட்டும் பேசுகிறார்கள் .
மார் 04, 2026 06:21 pm
Rate this
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,
நீங்கள் குறிப்பிடுவது OPS எனப்படும் ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் , இப்போ அது இல்லை
மார் 04, 2026 09:52 pm
Rate this