Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 வெளிநாட்டுக்கு சென்ற ஹவாலா பணத்தை மீட்போம்: பழனிசாமி

 வெளிநாட்டுக்கு சென்ற ஹவாலா பணத்தை மீட்போம்: பழனிசாமி

சென்னை: ''ஊழல் வழக்கில், அமைச்சர் நேரு சிக்கியதால், முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை அம்பத்துாரில், நேற்றிரவு நடந்த பிரசார பயணத்தில், அவர் பேசியதாவது:

திறமையில்லாதவர் கடந்த ஐந்தாண்டு கால, தி.மு.க., ஆட்சியில், தமிழகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஸ்டாலின் குடும்பத்திற்குதான் நன்மை கிடைத்துள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கஞ்சா கிடைக்கிறது. மாணவர்கள், இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின். போதைப் பொருட்களை அதிகம் விற்பதே தி.மு.க., நிர்வாகிகள்தான். கொள்ளை அடிப்பது மட்டுமே தி.மு.க., அரசின் குறிக்கோள்.
கடந்த 19ல், சட்டசபையில் இரண்டரை மணி நேரம் பேசினேன். அப்போது ச-பைக்கு வராமல், முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிந்து கொண்டார்.
நான் கேட்ட கேள்விகளுக்கு, பதில் சொல்லும் திறமையில்லாதவர், முதல்வர் ஸ்டாலின். ஜெயலலிதா மறைவுக்கு பின், பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு, நான்காண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.
கொரோனா பேரிடர் காலத்தில், அ.தி.மு.க., அரசு திறமையாக செயல்பட்டு, மக்களை பாதுகாத்தது.
இப்படிப்பட்ட நெருக்கடி காலத்திலும், விலைவாசி உயரவில்லை. சட்டம் - - ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம்.
தமிழகத்தில், 6,000 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அதில் குறைந்தது 1.50 கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன.
ஸ்டாலினுக்கு பயம் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய், அதிகம் வாங்கும் விஞ்ஞான ரீதியான ஊழலால், ஆண்டுக்கு 5,400 கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மாக் கடைகளில் மட்டும், தி.மு.க., 24,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது, ஊழல் வழக்குப்பதிவு செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும், முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. அந்த பயத்தில் பதறிபோய்தான், என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் ஒரு திட்டத்தை அறிவிப்பார். அதற்கு ஒரு குழு அமைப்பார். அதோடு முடித்து விடுவர்.
தி.மு.க., அரசு என்பது குழு அரசு. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். கடன் வாங்கிய பணம் அனைத்தும், ஹவாலா பணமாக, வெளிநாட்டுக்கு சென்று விட்டது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், வெளிநாட்டுக்கு சென்ற, ஹவாலா பணத்தை மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement