Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement

போட்டூன்!

1/26
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு தேவைப்படும் பொருட்களை பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது. இடம்: பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்.கே.நகர், சென்னை.

2/26
தமிழகம் இதுவரை கண்டிராத அரசியல் வினோதம்…! சென்னையில் நேற்று தன் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு வேனில் திரும்பிய தவெக தலைவர் விஜயை, தவெக, காங், விசி கட்சியினர் கொடியசைத்து வரவேற்று மகிழ்ந்தனர்.

3/26
தமிழக சட்டசபை தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சொந்த ஊர்களுக்கு கூட்ட நெரிசலுக்கு இடையே பயணித்த மக்கள்.

4/26
திருவள்ளூரில் நடந்த பிரசார கூடத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கலந்து கொண்டார். அவரது வலது கை விரல் அடிப்பட நிலையில் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அந்த நிலையில், அவருடன் கை குலுக்க வேட்பாளர்களான துரை சந்திரசேகர், ராஜேந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் கையை நீட்ட அத்தனை பேருடனும் கை கொடுத்தால் அடிப்பட்ட தன் கை என்னாகுமோ என்ற கவலையுடன் பார்க்கிறார் ராகுல்.

5/26
சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக, மை வைத்த விரலை காட்டி வாக்காளர்கள் இலவசமாக டீ குடிக்கலாம் என சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் பேனர் வைத்துள்ளனர். இது ஓட்டு போடுவதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு உற்சாகமான முயற்சி என்கிறார் அந்த கடைக்காரர்.

6/26
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரசாரத்தின் போது, நடிகர் அஜித்குமார் படம் போட்ட கொடிகளை காட்டி தொண்டர்கள் வரவேற்றனர். இடம்: வி.கே.கே.மேனன் ரோடு, காந்திபுரம், கோவை.

7/26
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன், ராமநாதபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு சிறுவன் திண்டுக்கல்லுன்னா பூட்டு...எங்க சீனிவாசன் தாத்தாவுக்கு தான் ஓட்டு… எதிர்வேட்பாளர்களுக்கு வைக்கணும் வேட்டு...' என கூறியதும் வாயில் கை வைத்து சந்தோஷத்தில் உறைந்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.

8/26
மேடைக்கு வைகோ வந்து நீண்ட நேரமாகியும், வேட்பாளர் கருணாஸ் அங்கு இல்லாதது வைகோவை அதிருப்தி அடையச் செய்தது. பொறுமையிழந்த அவர், 'எங்கே வேட்பாளர்?' என கடிந்து கொண்டார். வைகோ மேடையில் பேசிக்கொண்டிருந்த போது கருணாஸ் அவசர அவசரமாக மேடைக்கு வந்து தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்காத குறையாக கும்பிடு போட்ட பிறகு கூல் ஆனார் வைகோ. இடம்: சிவகங்கை

9/26
திண்டுக்கல்லில் வீடு வீடாக சென்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வர போகுது… நல்ல காலம் பிறக்க போகுது...' என குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்த திமுக தொண்டர் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு வீட்டின் முன் ஒட்டப்படிருந்த அதிமுக- திமுக ஆதரவு ஸ்டிக்கர்களை பார்த்து திகைத்து போய் நின்றார்.

10/26
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.

11/26
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.

12/26
புதுச்சேரி கல்மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் நடக்க முடியாத பாட்டியை தூக்கி சென்று ஓட்டு போட வைத்தனர்.

13/26
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூரில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாதது குறித்து கிராமத்தினர் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

14/26
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் வேலுவின் பிரசாரத்தின் போது ஆரத்தி தட்டுகளில் பணம் போடாததால் பெண்கள் சற்று ஏமாற்றத்துடன் நின்றனர். உடனே அவர்களிடம் தேர்தல் ஆணையமும், பத்திரிக்கையாளர்களும் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது முடியாதுங்கம்மா… கொஞ்சம் புரிஞ்சுக்கங்க! என்று கட்சிக்காரர்கள் சொன்னதும் சிரித்துக்கொண்டே கலைந்து சென்றனர்.

15/26
கடலூர்
மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக
பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற விருத்தாசலம்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் துர்கை அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது.
பின் கோவிலில் தரிசனம் செய்த அவர் புதுமண தம்பதியருக்கு ஆசி வழங்கினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் துர்கை அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின் கோவிலில் தரிசனம் செய்த அவர் புதுமண தம்பதியருக்கு ஆசி வழங்கினார்.

16/26
ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வீரப்பன் சத்திரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒரு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

17/26
காசு வாங்கி ஓட்டு போட்டால் மொட்டை அடித்து மிளகாய் அரைத்து விடுவர் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில், கோவை கிணத்துக்கடவு சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது, மொட்டை அடித்து மிளகாய் மாலையுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இடம்: மதுக்கரை தாலுகா அலுவலகம்.

18/26
திருத்தணி தொகுதி தவெக வேட்பாளர் சத்யகுமார், தனி நபராக சென்று திருத்தணி நகரத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்து வருகிறார்.

19/26
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தொண்டர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அது சரி எம்ஜிஆர் சிலை எங்கே என்கிறீர்களா? இப்ப அவரா முக்கியம்?

20/26
தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவர் விஜயனுக்கு, சட்டசபை தேர்தலில் சீட் வழங்க கோரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் பெரிய கேனில் கொஞ்சம் போல எரிபொருளுடன் வந்து தீக்குளிக்க போறேன் என்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

21/26
துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டபோது, அவருடன் திருவண்ணாமலை வேலு, கலசப்பாக்கம், சரவணன், கீழ்பெண்ணாத்தூர் பிச்சாண்டி, செங்கம் கிரி ஆகிய நான்கு திமுக வேட்பாளர்களும் பிரசார வாகனத்தில் ஏறி குறைவான இடத்தில் நெருக்கியடித்துக்கொண்டு நின்றதால், வாக்காளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் போட கூட சிரமப்பட்டனர்.

22/26
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள அமைச்சர் பெரியகருப்பன், பகுத்தறிவு பேசும் கட்சியை சேர்ந்தவர் என்றாலும், அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தனது குலதெய்வமான வேலங்குடி கருப்பண சாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் பிரசாரத்தை மேற்கொண்டார்.

23/26
விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் காங்., கட்சி சிட்டிங் எம்எல்ஏ ராதாகிருஷ்ணனுக்கு விருத்தாசலம் தொகுதி சீட் கிடைக்க கூடாது என அதே கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலர் ஜெயகுரு பிராது கட்டி வேண்டிக் கொண்டார். அந்தத் தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பிராதை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

24/26
தேர்தல் வந்தாலே எல்லோருமே பிசியாகி விடுகின்றனர். வேட்டி துண்டு விற்றுக்கொண்டிருந்த இந்த பெண்மணி, 'அதை எல்லாம் அப்புறம் வித்துக்கலாம், இப்ப விறுவிறுப்பா விற்கிற கட்சி கொடி, குடை, பேட்ச்களில் கவனம் செலுத்துவோம்' என்று களத்தில் இறங்கியிருக்கிறார் இவர். இடம்: டவுன்ஹால், கோவை.

25/26
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், சென்னை மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது பிரசார வேனின் பக்கவாட்டில் துண்டு கட்டி, அதை பிடித்து தொங்கிக் கொண்டே சென்ற தென் சென்னை, தென் கிழக்கு மாவட்ட செயலர் அசோக் மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார்.

26/26
கைவிரல்களில் பெரிய பெரிய மோதிரம் அணிந்து காணப்படும் அதிமுக பிரமுகர் மோதிரம் பொன்னுசாமி, தேர்தல் நேரத்தில் ரொம்ப பிசியாக வலம் வருவார். இவர் வாய் திறந்து பிரசாரம் செய்ய வேண்டாம், கையெடுத்து கும்பிட்டாலே போதும், அதுவே பெரிய பிரசாரம் தான். இடம்: அதிமுக தலைமை அலுவலகம், சென்னை.