ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய்
தமிழகத்தில், ஜாதியால் பிறந்து, சிந்தித்து, வாழ்ந்து, மடியும் சமூக கட்டமைப்பு உள்ளது. இதில் வசமாக சிக்கி கிடக்கிறோம். ஜாதியை மறுத்து, பாட்டாளி வர்க்கமாக வாழ முயன்றாலும் அனைவரும் ஒருங்கிணைய முடியவில்லை. தமிழகத்தில் ஜாதிய ஆணவக் கொலைகள் தொடர்கின்றன. ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய் ஆட்டிப்படைக்கிறது. ஜாதி பெயரை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அப்படித்தான் சமூக அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. புரட்சிகரமாக பேசி எழுதினாலும், குடும்பத்தில் கூட மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை. ஆணவக் கொலையை வலதுசாரிகள் கண்டிப்பதில்லை. ஜாதியத்தை தகர்க்கும் அறிவாயுதம், பேராயுதம் அரசியலமைப்பு சட்டம் தான். இன்றைய இளைஞர்களிடம், மாறுபட்ட முற்போக்கு சிந்தனையை வளர்க்க வேண்டும். - திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am