நடிகர் விஜய் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை: ம.தி.மு.க.,
திருச்சி: ம.தி.மு.க., முதன்மை செயலர், துரை வைகோ நேற்று அளித்த பேட்டி: நடிகர் விஜய் செல்லும் இடங்களில் வரும் கூட்டம் ஓட்டாக மாற வாய்ப்பில்லை. விஜய்க்கு அளிக்கும் ஓட்டு, பா.ஜ.,வுக்கான மறைமுக ஆதரவாக போய் விடும். விஜய்க்கு முதல் தலைமுறை ஓட்டுகள் தான் உள்ளன. அவர்கள் ஓட்டளிக்க வரமாட்டார்கள். அவர்கள், தேர்தல் நாளன்று பிக்னிக் சென்று விடுவர். தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே தான் போட்டி. எம்.ஜி.ஆரையும் விஜயையும் ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆர்., நீண்ட காலம் தி.மு.க.,வில் பயணித்து, அரசியலில் ஈடுபட்டவர். விஜய் கட்சியில், அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லை; அக்கட்சிக்கென கட்டமைப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am