அண்ணாமலையை எதிர்பார்க்கும் அ.தி.மு.க.,வினர்
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், கோவை வடக்கு தவிர, மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பிரசார பணியில் தீவிரமாக உள்ளனர். தேர்தல் பணிகளுக்கு, பா.ஜ.,வின் மண்டல், கிளை கமிட்டி நிர்வாகிகளையும் அழைத்துள்ளனர். ஆனால், அண்ணாமலை போட்டியிட்டால் தான் வருவோம் என பா.ஜ., நிர்வாகிகள் கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து, வேலுமணியின் ஆலோசனைப்படி, அ.தி.மு.க., வேட்பாளர்கள், நேற்று முன்தினம் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிலையில் நேற்று வெளியான பா.ஜ., வேட்பாளர் பட்டியலில், அண்ணாமலை பெயர் இல்லை. ஆனாலும், பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றிபெற, அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், இனி தேர்தல் பணிகளில் கோவை பா.ஜ., நிர்வாகிகள் ஈடுபடுவர் என, கோவை மாவட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am