Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அண்ணாமலையை எதிர்பார்க்கும் அ.தி.மு.க.,வினர்

அண்ணாமலையை எதிர்பார்க்கும் அ.தி.மு.க.,வினர்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், கோவை வடக்கு தவிர, மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பிரசார பணியில் தீவிரமாக உள்ளனர். தேர்தல் பணிகளுக்கு, பா.ஜ.,வின் மண்டல், கிளை கமிட்டி நிர்வாகிகளையும் அழைத்துள்ளனர். ஆனால், அண்ணாமலை போட்டியிட்டால் தான் வருவோம் என பா.ஜ., நிர்வாகிகள் கூறிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து, வேலுமணியின் ஆலோசனைப்படி, அ.தி.மு.க., வேட்பாளர்கள், நேற்று முன்தினம் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில் நேற்று வெளியான பா.ஜ., வேட்பாளர் பட்டியலில், அண்ணாமலை பெயர் இல்லை. ஆனாலும், பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றிபெற, அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், இனி தேர்தல் பணிகளில் கோவை பா.ஜ., நிர்வாகிகள் ஈடுபடுவர் என, கோவை மாவட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Advertisement