புதுச்சேரியில் வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க.,
சென்னை: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று நிறைவடையும் நிலையில், அ.தி.மு.க., போட்டியிடும் இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. புதுச்சேரியில், தே.ஜ., கூட்டணியில், ஆளும் என்.ஆர்.,காங்கிரஸ், பா.ஜ., - அ.தி.மு.க., - லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து, சட்டசபை தேர்தலை சந்திக்கின்றன. இக்கூட்டணியில், அ.தி.மு.க.,வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், 'அ.தி.மு.க., ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, புதுச்சேரி உப்பளம் தொகுதியில், கட்சியின் அம்மாநில செயலர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் முன்னாள் மாநில துணை தலைவர் காந்தி ஆகியோர், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுவர்' என கூறப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am