ஜெயலலிதா இல்லாததால் தலைகீழாக மாறிய பன்னீர்
சாதாரண டீக்கடைக்காரரான பன்னீர்செல்வத்தை, எம்.எல்.ஏ.,வாக்கி, அமைச்சராக்கி, மூன்று முறை முதல்வராக்கிய கட்சி அ.தி.மு.க., அப்படிப்பட்ட கட்சியை, 'அழிந்து விடும்; இல்லாமல் போய் விடும்' என, பன்னீர்செல்வம் சாபம் விடுகிறார். 'எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும்' என்பதற்கு, பன்னீர்செல்வம் தான் சிறந்த உதாரணம்.
முதல்வர் ஸ்டாலின், டீக்கடையில் நின்று டீ குடித்தபோது, 'நான் டீக்கடையே வைத்திருந்தவன்' என, ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தவர் பன்னீர்செல்வம். இப்போது, தி.மு.க.,வில் சேர்ந்துள்ள பன்னீர்செல்வம், தற்போது ஜெயலலிதா இல்லை என்றதும், தலைகீழாக மாறி விட்டார்.
- செல்லுார் ராஜு
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்