தி.மு.க., சீட்டுக்கு அ.தி.மு.க., பரிந்துரை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சேலம் மாவட்டம் ஏற்காடு, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி. அங்கு, 2006க்கு பின், தி.மு.க., வென்றதில்லை; அ.தி.மு.க., கோட்டையாக உள்ளது. தற்போது, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால், தி.மு.க.,வுக்கு சாதகமாக தொகுதி இருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு, 10க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, அவரது அயராத கட்சிப் பணியோ, தி.மு.க., நிர்வாகிகளின் சிபாரிசோ காரணம் இல்லை. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் காரணம் என்ற தகவலால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் ஒரே கேள்வி பளிச் பதில்
வெளிமாநிலத் தொழிலாளர்களை, தி.மு.க.,வினர் மேடைகளில் அவதுாறாகப் பேசுவது சரியா?
மார் 31, 2026 02:27 am