தி.மு.க., 'சீட்'டுக்கு அ.தி.மு.க., பரிந்துரை
சேலம் மாவட்டம் ஏற்காடு, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி. அங்கு, 2006க்கு பின், தி.மு.க., வென்றதில்லை; அ.தி.மு.க., கோட்டையாக உள்ளது. தற்போது, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால், தி.மு.க.,வுக்கு சாதகமாக தொகுதி இருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு, 10க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அவர்களில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, அவரது அயராத கட்சிப் பணியோ, தி.மு.க., நிர்வாகிகளின் சிபாரிசோ காரணம் இல்லை. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் காரணம் என்ற தகவலால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரேவதியின் கணவர் மாதேஸ்வரன், அரசு அதிகாரி; இவர், புதுக்கோட்டையில் பணிபுரிந்தபோது, அப்போது அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருடன் மிக நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில், தன் மனைவி ரேவதிக்கு 'சீட்' வேண்டும் என விஜயபாஸ்கரிடம் மாதேஸ்வரன் சொல்ல, தன் நண்பர்களான தி.மு.க., அமைச்சர்களிடம், ரேவதியை விஜயபாஸ்கர் சிபாரிசு செய்துள்ளார்.
இப்படித்தான், வேட்பாளர் ரேஸில் ரேவதி முந்தி நிற்பதாக, தி.மு.க.,வினர் குமுறுகின்றனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பரிந்துரைப்பவரை, வேட்பாளராக தி.மு.க., நிறுத்துவது, உச்சபட்ச அவலம் என்கின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்