Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மக்கள் விரும்புவது வாக்குறுதி அல்ல!

மக்கள் விரும்புவது வாக்குறுதி அல்ல!

மக்கள் விரும்புவது வாக்குறுதி அல்ல!

ம க்கள் விரும்புவது வாக்குறுதி அல்ல. தேர்தலுக்கு முன்னர் அரசியல் தலைவர்கள் பல வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். ஆனால், தேர்தலுக்குப் பின் அதை மறந்துவிடக்கூடாது. மக்கள் இன்று மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். யார் பேசுகின்றனர் என்பதை காட்டிலும், யார் செய்கின்றனர் என்பதை தான் பார்க்கின்றனர். ரோடு, குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு தான் மக்களுக்கு முக்கியம். தொழிற்சாலைகள், புதிய நிறுவனங்கள், ஸ்டார்ட் -- அப் வாய்ப்புகளை உருவாக்கினால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் மிகவும் அவசியம். பெண்கள் தொழில் துவங்கவும் கல்வி கற்கவும், அரசு நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டும். இதற்கு யார் உண்மையிலேயே பாடுபடுகின்றனரோ அவர்களுக்கு தான் என் ஓட்டு. ஊழல் இல்லாத அரசியல் உருவாக வேண்டும்.நேர்மையான அரசியல் இருந்தால் மட்டுமே நாடும் மாநிலமும் வளர்ச்சி அடையும். எனவே பெண்கள், மக்களின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைக்கும் கட்சிக்கு என் ஓட்டுரிமையை அளிப்பேன்.

புவனேஸ்வரி, 25 'கிப்ட் ஷாப்' உரிமையாளர், சிவகாசி, விருதுநகர்

Advertisement